கோவை : மேட்டுப்பாளையம் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டது.

கேரளாவில் பெய்த பருவ மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் சிக்கி இன்னும் மீள முடியாமல் தவித்து வருகிறது. மெல்ல மெல்ல மழை நீர்வடிந்த போதும் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கேரள மக்கள் இன்னும் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த மாநில மக்களுக்கு உதவும் வகையில் மேட்டுப்பாளையம் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு, நேரடியாக அந்த மாநில மக்களுக்கு கொண்டு சென்று இன்று வழங்கப்பட்டது.

இன்னும் மழைநீர் வடியாமல் இருக்கும் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊழிநூல் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று இரவு லாரி மூலம் பத்திரிக்கையாளர்களே நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள், ஆடைகள், குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், தண்ணீர் மற்றும் சில்வர் தட்டுகள் உள்ளிட்டவற்றை வழங்கினர். அம்மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் உணவுப் பொருட்கள் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரித்து கொடுக்கப்பட்டது.