கோவை: நரசிபுரம் அருகே பயிற்சியின் போது மாடியில் இருந்து தள்ளிவிட்டதில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
கோவை: நரசிபுரம் அருகே பயிற்சியின் போது மாடியில் இருந்து தள்ளிவிட்டதில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
நரசிபுரம் கலைமகள் கல்லூரியில் கடந்த ஜுலை 12-ம் தேதி நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, கல்லூரி மாடியில் இருந்து குதிக்க மறுத்த மாணவி லோகேஸ்வரியை போலி பயிற்சியாளர் ஆறுமுகம் தள்ளிவிட்டதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் மற்றும் அவருக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த சிவகாசியைச் சேர்ந்த யோகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கைதான யோகநாதன் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி குணசேகரன் யோகநாதனிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.