கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட வந்ததாகக் கூறி இளைஞருக்கு அடிஉதை : போலீசில் ஒப்படைப்பு

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட வந்ததாகக் கூறி சந்தேகத்திற்கு இடமான இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.


கோவை : கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட வந்ததாகக் கூறி சந்தேகத்திற்கு இடமான இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையானது கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன்படுத்தும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் சுமார் 7,000 வெளிநோயாளிகளும், 1,600 உள்நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, பிரசவத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்த பிரசவ வார்டில் மட்டும் தினமும் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைப் பார்க்க வருகின்றனர். 

இந்த தாய், சேய் வார்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில், கேமரா வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பாதுகாப்பு வசதிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. அதேபோல, கடந்த சில மாதங்களாகவே இருசக்கர வாகன திருட்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை சந்தேகத்திற்கிடமான இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்குள் உள்ள தாய், சேய் பிரிவில் சுற்றித் திரிந்துள்ளார்.

இந்த இளைஞர் மருத்துவமனைக்குள் புகுந்து குழந்தையை திருட முயற்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது, பணியில் இருந்த தனியார் காவலாளியில் ஒருவரான கீதா என்பவர் சந்தேகத்திற்கிடமான இளைஞனை பிடிக்கும்போது அவரை தள்ளிவிட்டு ஓட முயற்சித்துள்ளார். இதனால், அருகில் இருந்த பிற காவலாளிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞனைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...