கோவையில் அடகு வைத்த நகைக்குப் பதிலாக போலி நகைகளை கொடுத்த வங்கி நிர்வாகம் : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

கோவை : ஆவாரம்பாளையத்தில் அடகு வைத்த நகையை மீட்கச் சென்ற வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகத்தினர் போலி நகையைக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : ஆவாரம்பாளையத்தில் அடகு வைத்த நகையை மீட்கச் சென்ற வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகத்தினர் போலி நகையைக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆவாரம்பாளையத்தில் சைக்கிள் கடை நடத்தி வரும் கணேசன் என்பவர் 190 கிராம் எடைகொண்ட தங்க நகைகளை அங்குள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ. 3 லட்சத்து 10 ஆயிரத்துக்கு அடமானம் வைத்துள்ளார். இந்த நிலையில், நீண்ட நாட்களாக வட்டி செலுத்தாத நிலையில், நகை ஏலம் விடும் நிலை வந்துள்ளது. இதையொட்டி, நகையை மீட்டு மீண்டும் அடமானம் வைக்க கணேசன் வங்கிக்கு சென்றுள்ளார். 



அசல் மற்றும் வட்டியைச் சேர்த்து ரூ. 3 லட்சத்து 60 ஆயிரத்தை செலுத்தி நகையை அவர் மீட்டுள்ளார். அப்போது, வங்கி அதிகாரிகள் தன்னிடம் கொடுத்த நகை போலியானது என்பதை உணர்ந்த கணேசன் அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது தொடர்பாக, வங்கி நிர்வாகத்தினரிடம் முறையிட்டுள்ளார். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. 

இந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டிருந்த சக வாடிக்கையாளர்களுக்கும் தங்களது நகைகள் மீது சந்தேகத்துடன் கூடிய அச்சம் ஏற்பட்டது. இதனால், வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, வங்கி தரப்பிலிருந்து நகைக்கு எதுவும் ஆகாது என உறுதி அளித்ததையடுத்து, வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்.



இந்தப் போலி நகை விவகாரத்தில் வங்கியின் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்த கார்த்திக் என்பவரை பீளமேடு போலிசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...