அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க முனைப்பு காட்டும் ஆசிரியர்கள்

கோவை: மாணவர் சேர்க்கை குறைந்து அரசுப் பள்ளிகள் மூடு விழா காணும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.


கோவை: மாணவர் சேர்க்கை குறைந்து அரசுப் பள்ளிகள் மூடு விழா காணும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

தரம், அடிப்படை வசதிகள் மற்றும் ஆங்கிலக் கல்வி மோகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசுப் பள்ளிகளில் சமீப காலமாக மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பல்வேறு பள்ளிகள் மூடப்படும் நிலையம் ஏற்பட்டது.



இதன் காரணமாக 890 தலைமை ஆசிரியர்கள் உட்பட சுமார் 1500 ஆசிரியர்களும் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு சென்றனர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, லேப்டாப்கள், சீருடைகள், புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் மிதிவண்டிகள் என 14 வகையான பொருட்களை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இருந்த போதிலும், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது சிரமமான செயலாகவே இருந்து வருகிறது. 

கடந்த 2017-ம் ஆண்டின் படி, 890 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே பயின்றுள்ளனர். 

இது குறித்து நல்லாசிரியர் விருது பெற இருக்கும் ஸதி கூறுகையில், " அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல மாணவர்கள் கான்வென்ட் பள்ளியில் படிக்க கோரி அவர்களது பெற்றோர்களால் மனம் மாற்றப்படுகின்றனர். எனவே அவர்களை அரசுப் பள்ளிகளில் நீடிக்க வைப்பதில் சிக்கல் நீடிக்கின்றது." என்றார். 



இந்த சூழலில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் களமிறங்கியுள்ளனர். ஒரு மாதத்திற்கு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகியதாக தெரிகிறது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...