சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.
சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க.,வின் முன்னாள் தலைவராக இருந்த கருணாநிதி காலமானதற்குப் பிறகு, அக்கட்சியின் தலைமை பொறுப்பு காலியாக இருந்தது. இந்த பதவிக்கு ஸ்டாலின் கடந்த 26-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இருவரையும் எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், அக்கட்சி சார்பில் இன்று அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின், துரைமுருகன் உட்பட தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தி.மு.க.,வின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதே போல, துரைமுருகனும் கோப்புகளில் கையெழுத்திட்டு பொருளாளராக பதவியேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் 4000-க்கும் மேற்பட்ட தி.மு.க., உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.