கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பாளர் பரிசீலனை : தேர்தல் அதிகாரியை கடத்திச் சென்ற போலீசாரால் பரபரப்பு

திருப்பூர் : உடுமலை அருகே கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பாளர் பரிசீலனையின் போது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் தேர்தல் அதிகாரியை கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : உடுமலை அருகே கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பாளர் பரிசீலனையின் போது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் தேர்தல் அதிகாரியை கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடுமலை அருகே குமரலிங்கத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிர்வாகக் குழு தேர்வு நடைபெற்றது. இதில், அ.தி.மு.க., மற்றும் டி.டி.வி., தினகரனின் அ.ம.மு.க., நேரடியாகப் போட்டியிட்டது. கடந்த சனிக்கிழமை தேர்தல் அதிகாரி ஆனந்தராஜ் மூலமாக வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இன்று வேட்பாளர் பரிசீலனை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, காலை முதல் இரு கட்சியினரும் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன் திரண்டனர். 



இருப்பினும், காலை முதல் எந்த நபரின் மனுக்களும் பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாலை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்படுவது போல, அ.தி.மு.க., வேட்பாளர்கள் 11 போ் மனுக்கள் மட்டும் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவித்தார். அத்துடன், மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகக் கூறி விட்டு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் அணி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு பலகையில் தோ்வாளா்கள் பெயர் பட்டியலை ஒட்டினார்.



இதனிடையே, பரிசீலனையே செய்யாமல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறி, டி.டி.வி., தினகரன் கட்சியினர் அதிகாரியிடம் விளக்கம் கேட்க முற்பட்டனர். ஆனால், அவா்களை உள்ளே விடாமல் தடுத்த போலீசார், தோ்தல் அதிகாரி ஆனந்தராஜை போலீசார் வாகனத்தில் கடத்தி செல்வது போல அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...