3 மாதங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது : மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார கிராம மக்கள் நிம்மதி

கோவை: மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்ததால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்ததால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.



மேட்டுப்பாளையம் மற்றும் காரமடையைச் சுற்றி சீலியூர், பனப்பாளையம், மேடூர், வெள்ளியங்காடு, கனுவாபாளையம், முதுககல்லூர் மற்றும் கெம்மராம்பாளையம் போன்ற கிராமங்கள் உள்ளன. வனப்பகுதி மிகுந்த இந்த கிராமங்களில் யானை போன்ற வனவிலங்குகள் அதிகளவு சுற்றித் திரிகின்றன. குறிப்பாக, கடந்த 6 மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த சிறுத்தை, விவசாய நிலங்களை பாதுகாக்கப் பயன்படுத்தும் வேட்டை நாய்களை அடித்துக் கொன்று வந்தது. மேலும், கிராம மக்களை துரத்தியும், உயிர் பீதியை ஏற்படுத்தி வந்தது. 

பின்னர், கிராம மக்களின் புகாரைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மாமிசம் அடங்கிய கூண்டுகளும் அமைக்கப்பட்டன. ஆனால், கடந்த சில நாட்களாக கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி வந்த இந்த சிறுத்தை, கூண்டில் அகப்படாமல் சுற்றித் திரிந்து வந்தது. இந்த நிலையில், மோத்தேபாளையம் கிராமத்தில் உள்ள சென்னாமலைக்கரடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டிற்குள் சிறுத்தை இன்று சிக்கியது. கூண்டுக்குள் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயினை பிடிக்க வந்த சிறுத்தை கூண்டின் கதவு மூடிக்கொண்டதால் பிடிபட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை மீட்டனர். 



இதனையடுத்து, மக்களின் பாதுகாப்பு கருதி சிறுத்தை கூண்டோடு மற்றொரு வாகனத்தில் ஏற்றப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊர் பகுதிகளை கடந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுத்தை அங்கு பாதுகாப்பாக கூண்டில் இருந்து வெளியேற்றப்பட்டது. 

சிறுத்தை பிடிபட்டது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், "ஊர் பகுதிக்குள் சுற்றித்திரிந்து வந்த இந்த சிறுத்தைக்கு மூன்று முதல் நான்கு வயதிருக்கலாம். வனத்தை நோக்கி மக்களின் வாழ்விடங்கள் விரிவாக்கப்படுவதே இது போன்ற மனித விலங்கின மோதல்கள் தொடர காரணம்," என்றார். 

கடந்த 6 மாதங்களாகக் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்த சம்பவத்தால் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...