பிரிக்கால் விவகாரத்தில் சுமூக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: 144 பேர் பகுதி கதவடைப்பு விவகாரத்தில் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: 144 பேர் பகுதி கதவடைப்பு விவகாரத்தில் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் ஆலை நிர்வாகம் பகுதி கதவடைப்பு என்ற பெயரில் 144 தொழிலாளர்களை கடந்த 16-ம் தேதி முதல் வேலையில் இருந்து நீக்கியது. அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி பிரிக்கால் தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து மனு ஒன்றை இன்று அளித்துள்ளனர். 

அதில், கூறியிருப்பதாவது:- பகுதி கதவடைப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள 144 பேரை மீண்டும் பணியில் சேர்க்க பிரிக்கால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஏ.ஐ.சி.சி.டி.யு., அமைப்பினைச் சேர்ந்த 144 தொழிலாளர்களை வேண்டும் என்றே நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த 14-ம் தேதி முதல் தொழிலாளர்களிடம் இருந்து செய்யப்பட்ட பிடித்தங்களை திரும்பக் கொடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த தகுதியான சங்கத்தை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னரே, இந்த வேலை நீக்க நடவடிக்கையினை ஆலை நிர்வாகம் எடுத்துள்ளது. 

பாரபட்சம் இல்லாத அதிகாரிகளைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த தகுதியான சங்கத்தை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் நிர்வாகம் தீர்த்து கொண்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். 

இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...