காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மறுசீரமைப்புக்கு மத்திய அரசு ரூ. 7.63 கோடி ஒதுக்கீடு

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ. 7.63 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ. 7.63 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 

வைணவ சமுதாயத்தினரின் திருவரங்கம், திருவேங்கடம் ஆகிய ஸ்தலங்களுக்கு அடுத்து, 3-வது முக்கிய கோவிலாக கருதப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலாகும். இந்தக் கோவில் கட்டப்பட்ட ஆண்டு குறித்து இதுவரை எவருக்கும் தெரியாத நிலையில், சோழர்களால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

சோழர் காலத்தில் பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. இதைத் தொடர்ந்து, விஜயநகர அரசர்களால் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்கள் கட்டப்பட்டது. நூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் என்ற பெருமையை இந்தக் கோயில் பெற்றுள்ளது. ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடைய கிழக்கு கோபுரம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. பழம் பெருமை வாய்ந்த இந்தக் கோவிலை மறுசீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்த நிலையில், வரதராஜ பெருமாள் கோவிலின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ. 7.63 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தத் தகவலை மாநிலங்களுக்கான மத்திய வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம், தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...