விநாயகர் சிலை அமைக்க விதிகளைத் தளர்த்துங்கள் : கோவையில் இந்து முன்னணி கோரிக்கை மனு

கோவை: கோவையில் விநாயகர் சிலைகளை அமைக்க விதிகளைத் தளர்த்த வேண்டும் என்று கோரி இந்து முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை:  கோவையில் விநாயகர் சிலைகளை அமைக்க விதிகளைத் தளர்த்த வேண்டும் என்று கோரி இந்து முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விநாயகர் சதுர்த்திக்கு சிலை அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:-



* விநாயகர் சிலை அமைக்க விரும்பும் அமைப்பினர் ஒரு மாதத்திற்கு முன்பாக படிவம் 1-ல் சம்பந்தப்பட்ட சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர்களிடம் தடையில்லா சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

* தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரியத் துறையிடமிருந்து சான்றுகள் பெற வேண்டும். விநாயகர் சிலைகள் களி மண்ணால் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தினால் தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்தக் கூடாது.

* சிலைகளின் உயரம் 10 அடிக்கு மிகாமல் (அடித்தளம் மற்றும் பீடம் உள்பட) அமைக்கப்பட வேண்டும். பிற மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அருகில் சிலைகள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது. பெட்டி வடிவ ஒலிபெருக்கிகளைப் பூஜையின் போது காலை மற்றும் மாலை வேளைகளில் தலா 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* அரசியல் கட்சி மற்றும் மத சார்புள்ள இயக்கங்களின் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கக் கூடாது. சிலை ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்க அனுமதியில்லை.

* மத உணர்வைத் தூண்டும் வகையிலான அல்லது பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் எழுப்பக் கூடாது. சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாள்களுக்குள் விசர்ஜனம் செய்ய வேண்டும்.



உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விதிகளை தளர்த்த வலியுறுத்தி கோவை மாவட்ட இந்து முன்னணியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்திதாளர்களிடம் மாவட்ட பொறுப்பாளர் குணா கூறுகையில், "இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட நியாமான கோரிக்கைகளை அரச பரிசீலனை செய்து விதிமுறைகளை தளர்த்த வேண்டும். இல்லையெனில் போராட்டங்களில் ஈடுபடுவோம்." என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...