கோவை: ஊதிய உயர்வு கோரி 8-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று கஞ்சித் தொட்டி திறந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் கோவை, கமுதகுடி, காளையார் கோவில் ஆகிய இடங்களில் 7 பஞ்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பஞ்சாலைகளில் பணிபுரியும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கக் கோரி, கடந்த 20-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் 8-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடத்தப்பட்ட முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், உடனடியாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை சி.எஸ்.டயிள்யூ ஆலை முன்பாக தொழிலாளர்கள் இன்று கஞ்சித் தொட்டி திறந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தேசிய பஞ்சாலை கழக ஆலை நிர்வாகம் உடனடியாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும், இதே கோரிக்கையினை வலியுறுத்தி கோவையில் உள்ள 5 பஞ்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.