இருசக்கர வாகன திருட்டை தடுக்க டோக்கன் சிஸ்டம் முறை வேண்டும் : கோவை அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் கோரிக்கை

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நடைபெறும் இருசக்கர வாகன திருட்டை தடுக்க டோக்கன் சிஸ்டம் முறை வேண்டும் என்று மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை:  கோவை அரசு மருத்துவமனையில் நடைபெறும் இருசக்கர வாகன திருட்டை தடுக்க டோக்கன் சிஸ்டம் முறை வேண்டும் என்று மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையானது கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன்படுத்தும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் சுமார் 7,000 வெளிநோயாளிகளும், 1,600 உள்நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி சிகிச்சைக்காக வரும் நோயாளிகளைப் பார்ப்பதற்காகவும், மருத்துவமனையில் சிகிச்சைகள் பெறுவதற்காகவும் வருபவர்களில் பலர் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். 



இப்படி தினமும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தங்களில் நிறுத்தப்படுகிறது. அதேபோல, இங்கு வரும் வாகனங்களை நிறுத்த மொத்தம் 7 இருசக்கர வாகன நிறுத்தங்கள் இந்த மருத்துவமனையின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் மொத்தம் 78 தனியார் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், பொதுமக்களின் பாதுகாப்புக்காக அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் உள்ளது. இதில், இரண்டு போலீசார் உள்ளனர். இருப்பினும், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் தொடர்ந்து மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகிறது. போலீசாரின் பாதுகாப்பு வசதிகள் இருந்தும் இருசக்கர வாகனத்தை திருடுபவர்களும், சமூக விரோதிகளும் மருத்துவமனைக்குள் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

கடந்த சில மாதத்திற்கு முன்பு கூட மருத்துவமனையிலிருந்து இருசக்கர வாகனம் ஒன்று கொள்ளையர்களால் திருடப்பட்டது. கடந்த மாதம் மருத்துவமனையின் ஊழியர் ஒருவரின் வாகனமும் கொள்ளையனால் திருடப்படும் போது மருத்துவமனையின் தனியார் காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்து அரசு மருத்துவமனையின் புறக்காவல் நிலையம் மூலம் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோல, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர்.



அதேபோல, கடந்த 6 மாதத்தில் மட்டும் அரசு மருத்துவமனையில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டுப்போயுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையின் உட்புறம் உள்ள சி.சி.டி.வி., கேமராக்கள் சரிவர இயங்காததால், இந்த கொள்ளையர்களை அடையாளம் காண்பது காவல்துறைக்கு சவாலாக உள்ளது. இதை சரிசெய்ய அனைத்து பார்க்கிங்களிலும் தனியார் காவலர்களை நிறுத்திக் கண்காணிக்க வேண்டும். அதேபோல, டோக்கன் முறையில் இருசக்கர வாகன நிறுத்தங்களை கண்காணித்தால் மட்டுமே இருசக்கர வாகன திருட்டு கட்டுப்படுத்தபடும்.

இதுகுறித்து நோயாளியின் உறவினர் ஏ.டி. மோசஸ் கூறியதாவது :- அரசு மருத்துவமனையில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக இங்கு வருபவர்கள் கூறுகிறார்கள். இதனால், பொதுமக்கள் மத்தியில் மருத்துவமனையில் வாகனத்தை நிறுத்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய மருத்துவமனை நிர்வாகம் மாற்றுத் தீர்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு ஒரே வழி டோக்கன் சிஸ்டம் முறைதான். அதேபோல, இருசக்கர வாகனங்களை நிறுத்த குறைந்தபட்ச தொகையான ஒரு ரூபாய் வசூல் செய்யலாம். அப்படி செய்யும் தொகையினைப் பயன்படுத்தி நோயாளிகளின் நலன்களுக்கு உபயோகப்படுத்தலாம், என்றார். 



கோவை அரசு மருத்துவமனையில் நடைபெறும் இருசக்கர வாகன திருட்டை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து மாற்று தீர்வை காண்பதே அரசு மருத்துவமனைக்கு வருபவர்களின் மத்தியில் உள்ள அச்சத்தைப் போக்கும்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...