நீலகிரியில் யானை வழித்தடங்களை மீட்கும் பணி தீவிரம்: மேலும் சில விடுதிகளுக்கு நாளை சீல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேலும் சில விடுதிகளுக்கு நாளை (ஆக.,26) சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேலும் சில விடுதிகளுக்கு நாளை (ஆக.,26) சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 400 குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, முதற்கட்டமாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 27 விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்தது. 12 விடுதிகள் மீதான நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்து வந்தது. மேலும், பரிசீலனையில் உள்ள விடுதிகளின் பெயர்களை வெளியிட்டு, அதன் உரிமையாளர்கள் ஆவணங்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான விடுதி, தேவாலாவில் உள்ள அக்கார்டு நிறுவனத்தின் விடுதி உள்பட 12 விடுதிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா கூறும்போது :- 12 ரிசார்ட்டுகளுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க 48 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. அந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 12 ரிசார்ட்டுகளில் மொத்தம் 117 கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் சில கட்டிடங்களை குடியிருப்புகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றை தவிர்த்து வணிக ரீதியான கட்டிடங்களை காலி செய்ய 24 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடங்களுக்கு நாளை (ஆக.,26) சீல் வைக்கப்படும்.

தேவாலாவில் அக்கார்டு நிறுவனத்தில் உள்ள நிலங்களை 48 மணிநேரத்தில் கையகப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலங்களை மீட்க வனத்துறை பொறுப்பு எடுத்துள்ளது. பிரிவு 17 நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லியாளம் ஆணையர் இது குறித்து நோட்டீஸ் வழங்கியுள்ளார். அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...