கேரளாவிற்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா

கோவை: கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்தற்கும், சமூக சேவையில் ஈடுபட்டதற்கும் தன்னார்வலர்களுக்கு அனன்யாஸ் நானா நானி ஹோம்ஸ் சார்பாக (Ananya's Nana nani homes) பாராட்டு விழா கோவையில் இன்று நடைபெற்றது.


கோவை: கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்தற்கும், சமூக சேவையில் ஈடுபட்டதற்கும் தன்னார்வலர்களுக்கு அனன்யாஸ் நானா நானி ஹோம்ஸ் சார்பாக (Ananya's Nana nani homes) பாராட்டு விழா கோவையில் இன்று நடைபெற்றது.



வடவள்ளியில் உள்ள அனன்யாஸ் நானா நானி ஹோம்ஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தரும், ஆரிய வைத்திய பார்மஸியின் தலைமை மற்றும் நிர்வாக டிரஸ்ட்டியுமான பத்ம ஸ்ரீ பி.ஆர்., கிருஷ்ண குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்த மற்றும் சமூக சேவையில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டு தெரிவித்தார். 



நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் "இந்தியாவின் பெருமை அதிகளவில் இளைஞர்கள் இருப்பதுதான். சுற்றுச்சுழலை பாதுகாக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும். சமூக சேவை செய்ததற்காக விருது கொடுக்கும் இதுபோன்ற விழாக்கள் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை மேலும் ஊக்குவிக்கும்," என்றார்.



அனன்னையாஸ் நான நானி ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர், உமா மகேஸ்வரி பேசுகையில், "சமூக சேவைக்காக தன்னார்வலர்களை கௌரவிக்கும் இந்த விழாவை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், பல தொண்டுகளை செய்து மனித குளத்தை உயர்த்திட தன்னார்வலர்களுக்கு வாழ்த்துக்கள்," எனக் கூறினார். 

தொடர்ந்து, கோயமுத்தூர் பார் கேரளா இயக்கத்தைச் சேர்ந்த அஷ்யாந்த் பேசியதாவது :- இதுவரை 55 லாரிகளில் கேரளாவிற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றினர். 6 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் இந்தப் பணிகளில் கலந்துகொண்டனர். கேரளாவிற்கும் நமக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால், தமிழனாக நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம்," என்றார்.



இந்த நிகழ்ச்சியில் அஷ்யாந்த் (#CBE4KERALA), லஷ்மணன் (சக்ரிபைஸ் பிரண்ட்ஸ் கிளப்), பி. முருகன் (நிழல் மையம்), பிரதிப் (லெட்ஸ் தாங்க் பவுண்டேசன்), ஜெகதிஸ் (ஈகை திறன்), கிசோர் குமார் எம்.சி.3, கோவை வைல்டு லைப், பசுமை இயக்கம் ஆகியோர் விருது வழங்கி கெளரவிக்கபட்டனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...