திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நொய்யல் ஆற்றினை சுத்தப்படுத்தும் பணி இன்று தொடங்கியது.

இதனை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் . மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை துவங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். அதேபோல் நொய்யலாற்றினை சுத்தப்படுத்தி அதிலும் பிளாஸ்டிக் பொருட்கள் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் தரத்தை மேம்படுத்த வெளிநாட்டுக் கல்வி வல்லுநர்களோடு ஆலோசனை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவிலேயே அதிகளவு மாணவ-மாணவிகள் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்." என்றார்.

எம்.எல்.ஏ கோபம்
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனரில் அமைச்சர் பெயர் மட்டும் இடம் பெற்றிருந்ததாகவும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரின் பெயர் இடம் பெறாததை கண்ட எம்.எல்.ஏ குணசேகரன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், எனது தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் எனது பெயர் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது என்றும், வாக்குவாதம் நடத்தினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலையிட்டு வாக்குவாதத்தைச் சமரசம் செய்து வைத்தார்.