கோவை: ஆனைகட்டி அருகே சுற்றித்திருந்த காட்டு யானை மீது டாஸ்மாக் பார் ஊழியர்கள் தீப்பந்தங்கள் மற்றும் கற்களை வீசும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: ஆனைகட்டி அருகே சுற்றித்திருந்த காட்டு யானை மீது டாஸ்மாக் பார் ஊழியர்கள் தீப்பந்தங்கள் மற்றும் கற்களை வீசும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு சுமார் 10:30 மணியளவில் ஆனைகட்டியை அடுத்த ஜம்புக்கரை பகுதியில் காட்டு யானை ஒன்று வலம் வந்தது. இதனைப் பார்த்த அங்கிருந்த டாஸ்மாக் பார் ஊழியர்கள் யானை மீது கற்களை வீசியும், தீப்பந்தங்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் வன உயிரினங்கள் ஆர்வலர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று கடந்த மாதம் அனுவாவி சுப்ரமணியர் கோவில் அருகே சின்னத்தம்பி என்ற யானை மீது ஒருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தும் செய்தி ஒன்று வெளியானது. அப்போது, யானைகள் மீது தாக்குதல் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களை வனத்துறையினர் எச்சரித்தனர்.
ஆனால், தற்போது யானை மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.