கலைஞர் டிவியை பாதுகாக்க வகுப்பறைகள்: வெளியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவிகள்

திருப்பூர்: தி.மு.க., ஆட்சிக்காலத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சி பெட்டிகளைப் பாதுகாக்க அரசுப் பள்ளி ஒன்றின் வகுப்பறையைப் பயன்படுத்திவிட்டு மாணவிகளை கடந்த 8 ஆண்டுகளாக வெளியில் அமர்ந்து பாடம் படிக்க வைக்கும் அவலம் திருப்பூரில் அரங்கேறி வருகிறது.

திருப்பூர்: தி.மு.க., ஆட்சிக்காலத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சி பெட்டிகளைப் பாதுகாக்க அரசுப் பள்ளி ஒன்றின் வகுப்பறையைப் பயன்படுத்திவிட்டு மாணவிகளை கடந்த 8 ஆண்டுகளாக வெளியில் அமர்ந்து பாடம் படிக்க வைக்கும் அவலம் திருப்பூரில் அரங்கேறி வருகிறது. 

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி அருகே அமைந்துள்ளது பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு 3000-ம் மாணவிகள் பயின்று வருகின்றனர். பனிரெண்டாம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில் போதிய இட வசதி மற்றும் வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 2010-ம் ஆண்டு புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது.



தொலைக்காட்சி

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கான வகுப்பறைகள் அந்த புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டது. 'இனி இனிமையாக அமரலாம்., பாடங்களைப் படிக்கலாம்' என்று பாடி மகிழ்ந்தனர் மாணவிகள். அப்போது தான் தமிழக அரசு இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருந்தது.

அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதற்காக தொலைக்காட்சி பெட்டிகள் வந்து இறங்கின. அவையனைத்தும் அரசுப் பள்ளியில் உள்ள 10 புதிய வகுப்பறைகளுக்குள் அடுக்கப்பட்டன. விநியோகம் செய்யும் வரை மட்டும் இங்கே இருக்கட்டும் என்ற பெயரில் டிவி பெட்டிகள் தற்காலிகமாக வகுப்பறைகளுக்குள் தஞ்சம் புகுந்தன. ஆனால், தற்போது வரை அந்த வகுப்பறைகளுக்குள் பாடம் படிப்பவை அந்த உயிரற்ற தொலைக்காட்சி பெட்டிகளே.

நிறுத்தம்

தேர்தல் நேரத்தில் இலவச பொருட்களை விநியோகம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அமலானதால் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் மக்களுக்கு விநியோகம் செய்யப்படாமலேயே போனது. தற்போது ஆறு வகுப்பறைகள் அவ்வாறு முடங்கியே கிடக்கின்றன.

"வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் படிக்கட்டுகளின் அடியில் அமர்ந்து பாடம் பயின்று வருகின்றனர். தற்காலிகமாக அல்லாமல் கடந்த எட்டு ஆண்டுகளாக நிரந்தரமான வகுப்பறையானது அந்தப் பகுதி." என்றார் மாணவி ஒருவரின் பெற்றோர்.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் மட்டும் சுமார் 1000-ம் மாணவிகள் பயின்று வருகின்றனர். வகுப்பறை பற்றாக்குறையான காரணத்தால், எந்த வகுப்பறை கலியாகிறதோ அங்கு அவ்வப்போது இடம் பெயர்ந்து பாடம் படிக்கும் அகதிகளாக மாறியுள்ளனர். நடப்பு ஆண்டில் பள்ளியில் மாணவர் சேர்க்கை இன்னும் அதிகரித்தது. இந்த சூழலில் அவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க பெற்றோர் ஆசியர் கழகத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது வீணாகி வருகிறது.

இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் மஞ்சு.எஸ்.சுப்பிரமணியம் கூறுகையில், "கடந்த 2010-ம் ஆண்டு முதல் வகுப்பறைகள் மூடப்பட்டது. புதிய கட்டிடம் கட்டப்பட்டது முதல் தற்போது வரை இரு வகுப்பு கூட அங்கு நடைபெறவில்லை.மக்களுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த எந்த தொலைக்காட்சிப் பெட்டிகளும் விநியோகிக்கப்படாமல் உள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் இது குறித்து புகார் கூறி வருகிறோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கும் அவர்கள், அதனை அப்படியே கிடப்பில் போட்டு விடுகின்றனர். இந்தப் பள்ளியில் நூலகம் அமைத்துத் தர சில தன்னார்வ அமைப்புகள் முன்வருகின்றன. ஆனால், வகுப்பறைக்கே இடமில்லாத காரணத்தால் மாணவர்களுக்கு அருமையான நூலகம் ஒன்று கிடைப்பது வீணாகிவிட்டது. 

தேசிய அளவில் செய்தி பரவியதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அதிகாரி ஒருவர் பள்ளிக்கு வந்து ஆய்வு நடத்தினார். மேலும், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால், இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை." என்றார். 

சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் வேகமாக இயங்கினால், மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளை மீண்டும் பெறுவார்கள். "இது குறித்து பள்ளிக்கல்வித் துறை மாவட்ட வருவாய் அதிகாரிகளிடம் பேசியுள்ளது. இந்த மாதத்திற்குள் தொலைக்காட்சி பெட்டிகள் அங்கிருந்து அகற்றப்படும் என்று நம்புகிறோம்." என்கிறார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...