கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி : கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு

கோவை: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பயணிகள் மத்தியில் வெடி குண்டு பீதி தொற்றிக்கொண்டது.

கோவை: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பயணிகள் மத்தியில் வெடி குண்டு பீதி தொற்றிக்கொண்டது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், துபாய், இலங்கை ஆகிய நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று விமான வருகை பகுதியில் கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்று தள்ளு வண்டியில் கிடந்தது. இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பையை சோதனை செய்தனர். அப்போது, அந்த பையில் மர்ம பொருள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. அந்த பையை பயணிகள் யாரேனும் தவற விட்டு இருக்கலாம் என கருதிய பாதுகாப்பு படையினர் அதனை விமான நிலையத்திற்குள் பத்திரமாக எடுத்துச் சென்றனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் திடீரென சோதனை நடத்தியதன் காரணமாக விமான நிலையத்திற்குச் சென்ற பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பீதி தொற்றிக்கொண்டது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...