வேளாண்மையில் புதுமைகளை அறிமுகப்படுத்திய 20 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிப்பு

கோவை : வேளாண்மையில் புதுமைகளை புகுத்திய 20 பேருக்கு, 'உழவர் மேம்பாட்டு விழா 2018' நிகழ்ச்சியில் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் கவுரவிக்கப்பட்டனர்.



கோவை: வேளாண்மையில் புதுமைகளை அறிமுகப்படுத்திய 20 பேருக்கு, 'உழவர் மேம்பாட்டு விழா 2018' நிகழ்ச்சியில் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 

மத்திய அரசின் கரும்பு இனப்பெருக்கு நிலையம் சார்பில் கோவை கொடிசியா அரங்கில் 3 நாட்கள் நடக்கும் 'உழவர் மேம்பாட்டு விழா 2018' என்ற கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், விவசாயம் சார்ந்த பல்வேறு உபயோக உற்பத்தி பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி, வேளாண்மையில் புதுமைகளை அறிமுகப்படுத்தியதற்காக 20 பேருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். இந்த 3 நாள் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 60 பேர் கவுரவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



இதன் பின்னர், கொடிசியா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.,நாகராஜன், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக இயக்குனர் பக்‌ஷி ராம், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி., அருண்குமார், கனகராஜ், வேளாண் பல்கலை., துணைவேந்தர் ராமசாமி மற்றும் முனைவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...