இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் : அபராதம் வசூலிக்கும் கோவை போலீசார்

கோவை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு கோவை மாநகர போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

கோவை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு கோவை மாநகர போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.



இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டினால் மற்றும் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றால் மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட்டின் அவசியத்தின் விளம்பரங்களை செய்யவும், விழிப்புணர்வுகள் ஏற்படுத்தவும் காவல்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் மற்றும் வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடமும் அபராதம் விதித்து வருகின்றனர்.

நேற்று மதியம் மூன்று மணி முதல் தற்போது வரை 258 பேரிடம் அபராதம் வசூலித்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...