கோவை: உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிக்காக 1 ஹெக்டேர் நிலம் எடுப்பது தொடர்பாக 71 பேரிடம் இன்று மாநில நெடுஞ்சாலைத் துறை நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை உள்ளது. இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ. 216 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி தொடங்கியது.
சுமார் 1.95 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக ஆத்துப்பாலம் சுங்கச்சாவடி அருகே உள்ள கரும்புக்கடை பகுதியில் இருந்து உக்கடம் - செல்வபுரம் புறவழிச் சாலையில் திரும்பும் வகையில் அமைக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக, மேம்பாலத்தில் 55 தூண்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ. 131 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்காக உக்கடம் பேருந்து நிலையம் முதல் கரும்புக்கடை வரை 1 ஹெக்டர் நிலம் கையகப்படுத்த உள்ளது. இதற்காக நிலம் உரிமையாளர்களிடம் மாநில நெடுஞ்சாலை துறையினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், 71 பேர் கலந்துகொண்டனர்.
இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் கூறுகையில், "நிலம் எடுப்பது தொடர்பாக உரிமையாளர்களிடம் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிலம் தொடர்பான ஆவணங்களை அவர்களையே சமர்பிக்க சொல்லியுள்ளோம். ஆவணங்களின் அடிப்படையில் நிலம் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்படும். இதில், 17 பேர் தாமாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளனர்" என்றார்.
தற்போது, ஒரு சதுர அடிக்கு ரூ. 1,500 (Guide line value) நில மதிப்பீடு அளவீடு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு அதிலிருந்து இரண்டே கால் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இழப்பீடு வழங்க ரூ. 50 கோடியை மாநில நெடுஞ்சாலை துறையினர் ஏற்கனவே மாவட்ட வருவாய் துறையிடம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.