கோவை: கரும்பு இனப்பெருக்க அபிவிருத்தி மையத்தைக் லக்னோவுக்கு மாற்ற மத்திய அரசு முயற்சித்தால், அனைத்து கட்சியினரும் இணைந்து போராட வேண்டும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் 'உழவர் மேம்பாட்டு விழா 2018'வில் பங்கேற்ற கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி. நாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- கோவையில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் செயல்படும் கரும்பு இனப்பெருக்க அபிவிருத்தி மையத்தை லக்னோவுக்கு மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்கான வேலைகள் நடப்பதாக நேற்று கூட தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வாயிலில் போராடியது போல இந்தப் பிரச்சனைக்காக அனைத்து எம்.பி.,க்களும் போராடுவோம், இவ்வாறு தெரிவித்தார்.