முக்கொம்பு மேலணையில் 3 புதிய கதவணைகள் கட்டப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் 3 புதிய கதவணைகள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் 3 புதிய கதவணைகள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

திருச்சி முக்கொம்பு மேலணையில் கடந்த 2 நாட்களில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 9 மதகுகள் கடும் வெள்ளப் பெருக்கால் உடைத்தெறியப்பட்டது. இதையடுத்து, உடைந்த மதகுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது, தமிழக அமைச்சர்களும், பொதுப் பணித்துறை அதிகாரிகளும் உடன் சென்று பார்வையிட்டனர். 

மதகுகள் உடைந்த கொள்ளிடம் அணையில் ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது :- 

மேலணையில் ஷட்டர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இன்னும் 4 நாட்களில் பணி முடிந்து விடும். 182 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அணை கட்டப்பட்டது. 1924, 1977, 2013 ஆண்டுகளில் வெள்ளம் வந்த போது உபரி நீர் வெளியேறியது. தற்போது, தொடர்ந்து 8 நாட்களாக உபரி நீர் வெளியேறியது. இதன் காரணமாக மதகுகள் வழியாக தொடர்ந்து வந்ததால் உடைந்து விட்டது. 

விரைவில் புதிய அணை கட்டப்படும். புதிய அணைக்கு மொத்தம் ரூ. 410 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 325 கோடி ரூபாய் செலவில் கதவணை கட்டப்படும். கொள்ளிடத்தின் வடக்கு பகுதியில் அய்யன் கால்வாயில் ரூ. 85 கோடியில் மேலும் அணையும் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...