முல்லைப் பெரியாறு நீர்மட்ட விவகாரம் : தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய நீர்வளத்துறை நிராகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய நீர்வளத்துறை நிராகரித்துள்ளது. 

கேரளாவில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாரில் அதிக நீர் தேக்கியதே காரணம் என்று கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனிடையே, அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியாகக் குறைக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார். 

இதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர், அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை. அணையில் அதிக தண்ணீர் தேக்க வேண்டாம் என பதிலளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய நீர்வளத்துறை உரிய முடிவு எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக தொடர மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நிலைமை சுமூகமான பின் 142 அடி வரை உயர்த்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...