கோவை: தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வால்பாறையில் வாழும் மக்களின் வாழ்க்கை இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியது.

வால்பாறை பகுதியில் கடந்த 10 தினங்களாக கனமழை பெய்த வந்த நிலையில், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் குளம் போல தேங்கியது. குறிப்பாக, வால்பாறை அரசுப் பேருந்து பணிமனையை வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேலும், நிலச்சரிவு காரணமாக சாலைகளும் துண்டிக்கப்பட்டன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை குறையத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை தொடர ஆரம்பித்துள்ளனர். மேலும், சாலைகளில் வெள்ளநீர் வடிந்ததால், வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்குப் பேருந்து இயக்கப்பட்டுள்ளது. மண் சரிவு காரணமாக ஓரிரு பகுதிகளுக்கும் மட்டும் பேருந்து இயக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால், 95 சதவீதம் பேருந்துகளே இயக்கப்பட்டன. மேலும், வால்பாறையில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 85 சதவீதம் மாணவ, மாணவிகள் வருகை தந்தனர்.