பீசா, சிப்ஸ், பர்கர் போன்ற நொறுக்கு தீனிகளை கல்லூரிகளில் விற்பதற்கு மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது.

சமீபத்தில் கல்லூரி வளாகத்தில் மொபைல் போன் உபயோகிப்பதற்கு தடைவிதித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. பெரும்பாலும், செல்போன் இணையதளங்கள் மூலமாகவே அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளும் மாணவர்களுக்கு இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக மத்திய மனித வளத்துறையின் அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
பீசா, சிப்ஸ், பர்கர் போன்ற நொறுக்கு தீனிகளை விற்கத் தடை விதித்து மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நொறுக்கு தீனி உணவுகளை மாணவ, மாணவிகள் சாப்பிட்டால், அவர்களின் ஆரோக்கியம் சீக்கிரமாகவே கெட்டு விடுகிறது. உண்ணும் உணவே மருந்தாகும்.
உடல் எடையைக் கூட்டக்கூடிய, உடல்நலத்தைக் கெடுக்கக்கூடிய, பல்வேறு நோய்களுக்கு வழிவகை செய்யும் இது போன்ற நொறுக்கு தீனிகளை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையை அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்தக்கோரி பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மேலும், இந்த விதிமுறையை அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகமும் கடைபிடிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.