திருப்பூர்: திருப்பூரில் காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ எடை கொண்ட குட்காவை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், வஞ்சிபாளையம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை பரிசோதனை செய்த பொழுது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து, 500 கிலோ எடை கொண்ட ரூ 2.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் குவாலிஸ் காரை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஒட்டி வந்த சோபாராம் மற்றும் விநியோகஸ்தர் ஜிதேந்திரகுமார் ஆகியோரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆய்வக பரிசோதனை முடிவின் அடிப்படையில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.