துரிதமாக இயல்பு நிலைக்கு திரும்பும் திருவனந்தபுரம், பாலக்காடு மார்க்கமான ரயில்சேவைகள்

கோவை: மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம், பாலக்காடு மார்க்கமான ரயில்சேவைகளில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

கோவை: மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம், பாலக்காடு மார்க்கமான ரயில்சேவைகளில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அலுவா - திருச்சூர் மற்றும் திருச்சூர் - சொர்ணூர் ரயில் தடங்களில், சீரமைப்பிற்கு பிறகு நேற்று முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று முதல் பாலக்காடு மார்க்கமாக இயக்கப்பட வேண்டிய 51 ரயில்களில் 49 எக்ஸ்பிரஸ்களும், 80 பயணிகள் ரயில்களில், 79 ரயில்கள் மீண்டும் சேவையை வழங்கி வருகின்றன. 

இதேபோல, 87 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 126 பயணிகள் திட்டமிட்டபடி இயக்கப்பட இருக்கிறது. ஒரு எக்ஸ்பிரஸ் சேவை மட்டும் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் தகவல்கள் அனைத்து ரயில்நிலையங்களில் பயணிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம், பாலக்காடு மார்க்கமான ரயில்சேவைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...