கோவையில் பலத்த மழை பெய்தும் பொலிவிழந்து காணப்படும் கௌசிகா நதி

கோவை : கோவையில் பெய்து வரும் தொடர் கனமழையினால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில், கௌசிகா நதி மட்டும் பொலிவிழந்து காணப்படுவது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவையில் பெய்து வரும் தொடர் கனமழையினால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில், கௌசிகா நதி மட்டும் பொலிவிழந்து காணப்படுவது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சிறுவாணி, ஆழியாறு, சோலையாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல, நொய்யல் உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கோவை மக்களின் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில், கோவையின் வடகிழக்கு பகுதி மக்கள் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளனர். 

அதாவது, தற்போதைய மழைக் காலத்தில் அக்ரஹாரா சாமக்குளம், இடிகரை, கூடலூர், தெக்கலூர், கிட்டாம் பாளையம், குன்னத்தூர் மற்றும் சர்க்கார் சாமக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மழை பெய்யவில்லை. இதனால், வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த 17 கிராமங்கள்ளில்வறட்சி சூழ்நிலையே நிலவுவதாக பல்வேறு தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் தெரிவிக்கின்றன.

"கௌசிகா நதியில் இருந்து வெளியேறும் உபரி நீரின் மூலம் 20 கி.மீ., தொலைவில் உள்ள கிராமங்கள் பயனடைந்து வந்தன. ஆனால், தற்போது, அனைத்து இடங்களிலும் வறட்சியே நிலவுகிறது." என்கிறார் உள்ளூர்வாசி.

மேலும், இப்பகுதிகளில் உள்ள 15 குளங்கள் மற்றும் சிறுசிறு நீர்நிலைகளும் வறண்டு கிடக்கின்றன. மேலும், இங்குள்ள 27 தடுப்பணைகள் மறுசீரமைக்காததால், நிலத்தடி நீரும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

"நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு போதிய ஆதரவும் மற்றும் போதிய தகவல்கள் இல்லாததே இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு காரணம். இந்தப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு தவறாக கணிக்கப்படுவது முக்கிய பிரச்சனையாக உள்ளது. தற்போது, வரை கோவை வடகிழக்கு பகுதிகளில் குறிப்பிடும்படி எந்தவித மழைப் பொழிவும் இல்லை." என கௌசிகா நதி பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த பி.கே., செல்வராஜ் கூறியுள்ளார். 

மேலும், கோவை வடகிழக்குப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை தனியாக கணக்கிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...