கோவை மாவட்ட அளவிலான “ஸ்வர தாரங்கினி” பஜனை இசை போட்டி

கோவை: கோவையில் வாழும் கலை மையம் சார்பில் கோவை மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியருக்கான “ஸ்வர தாரங்கினி” பஜனை இசை போட்டி நடைபெற்றது.

கோவை: கோவையில் வாழும் கலை மையம் சார்பில் கோவை மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியருக்கான “ஸ்வர தாரங்கினி” பஜனை இசை போட்டி நடைபெற்றது.

கோவை ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற “ஸ்வர தாரங்கினி” பஜனை இசை போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்று, தங்களின் பாடும் திறனை வெளிப்படுத்தினர். கோவை மாணவ, மாணவியரின் குழுப் பாட்டு திறனை மேம்படுத்துவதற்காகவே இந்நிகழ்வு நடத்தப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.



இந்நிகழ்ச்சியில் 8 முதல் 18 வயதுடைய மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சீனியர் மற்றும் ஜூனியர் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஜூனியர் குழுக்களில் 8 முதல் 12 வயதுடையோரும், சீனியர் பிரிவில் 13 முதல் 18 வயதுடையோரும் இடம்பெற்று இருந்தனர். 



ஒவ்வொரு குழுவிலும் 4 முதல் 6 பேர் இடம்பெற்று இருந்தனர். இந்த நிகழ்வில் பாரம்பரிய இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. இதில், மொத்தம் 70 குழுக்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் வென்ற முதல் மூன்று குழுக்களுக்கு வாழும் கலை மையத்தின் ஆயுர்வேத பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வையொட்டி, வாழும் கலை மைய தன்னார்வலர்கள் பல்வேறு யோகா கலைகளை பார்வையாளர்களுக்கு கற்றுக் கொடுத்தனர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழும் கலையின் பயிற்றுநர்கள் மகாலிங்கம் மற்றும் ஸ்ரீவத்சன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...