திருப்பூர் : மேக் இன் இந்தியா திட்டத்தின் குறியீடான சிங்க வடிவமும், மறுசுழற்சி ஆடை உற்பத்தியை சித்தரிக்கும் ஓவியங்களை ஜென்ட்டேங்கில் எனப்படும் மிகச் சிறிய ஓவியங்களாக வரைந்து திருப்பூர் மாணவிகள் லிம்கா சாதனை படைத்தனர்.

உள்நாட்டு பனியன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின் மேக்-இன் இந்தியா திட்டம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள நிப்ட்-டீ எனும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் பயிலும் 25 மாணவ, மாணவியர்கள் 2,000 சதுரஅடி பரப்பளவு உள்ள காகிதத்தில் 400 சதுர அடியில் ஜென்ட்டேங்கில் எனப்படும் மிகச் சிறிய ஓவியங்களை வரைந்தனர்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் குறியீடான சிங்க வடிவமும், அதனை சுற்றிலும் மறுசுழற்சி ஆடை உற்பத்தியை சித்தரிக்கும் ஓவியங்களை தொடர்ந்து 34 மணி நேரம் வரைந்து லிம்கா புத்தகத்தின் சாதனையைப் படைத்தனர். இந்த சாதனை நிகழ்ச்சியில் லிம்கா சாதனை நிறுவன பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சாதனையை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு ஏற்றுமதியாளர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.