வெள்ளி கலவையைப் போல பாயும் பைக்காரா நீர்வீழ்ச்சி : ஆச்சர்யத்துடன் ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : நீலகிரியில் பெய்யும் தொடர் கனமழையின் காரணமாக ஆர்ப்பரித்துக் கொட்டும் பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளி கலவையைப் போல நீர் பாய்ந்து வருவதை சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

நீலகிரி : நீலகிரியில் பெய்யும் தொடர் கனமழையின் காரணமாக ஆர்ப்பரித்துக் கொட்டும் பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளி கலவையைப் போல நீர் பாய்ந்து வருவதை சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். 

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டமான நீலகிரி, கேரளா மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளதால் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை அதிகரித்துக் காணப்படும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் கொட்டி தீர்த்து வருவதால், அம்மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்கள் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. 



இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா, நடுவட்டம், உதகை போன்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், மாவட்டத்தில் மின் உற்பத்திக்காகப் பயன்படும் அணைகளான பைக்காரா, எமரால்டும் அவலாஞ்சி, அப்பர்பவானி, குந்தா போன்ற அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளதால், அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், பைக்காரா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன் அணையின் மூன்று மதகுகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பைக்காரா நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளியை கரைத்து ஊற்றுவது போல் தண்ணீர் பாய்ந்து வரும் காட்சியை பைக்காரா நீர் வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்து வருகின்றனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...