கோவையில் மகளிருக்கு தையல் இயந்திரம் வழங்கும் விழா

கோவை: கோவையை அடுத்த போத்தனூரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை மாநகரக் கிளையின் சார்பில், பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்பை அமைத்து கொடுக்கும் வகையில் 50 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் விழா கடந்த வியாழனன்று நடைபெற்றது.

கோவை: கோவையை அடுத்த போத்தனூரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை மாநகரக் கிளையின் சார்பில், பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்பை அமைத்து கொடுக்கும் வகையில் 50 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் விழா கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் தலைமை தாங்கினார். மேலும், கோவை மாநகர துணை ஆணையாளர் (சட்டம்-ஒழுங்கு) திருமதி. S. லட்சுமி, IPS., ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி. மலர்விழி மற்றும் திவ்யோதயா பல்சமய நல்லிணக்க மையத்தின் தலைவர் திரு. ஜான் பீட்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியதுடன் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினர்.

இதனையடுத்து, கோவை மாநகர துணை ஆணையாளர் (சட்டம்-ஒழுங்கு) திருமதி. S. லட்சுமி, IPS.அவர்கள் பேசுகையில், பெண்களை இழிவாகக் கருதிய காலம் மாறி பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையான பங்களிப்பை வழங்கிவரும் இந்த காலகட்டத்தில், நமது குடும்பத்தில் பெண் குழந்தைகளை சமமாக பாவிக்கும் மனப்பக்குவத்தைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டிட வேண்டும் என்றார். 



மேலும், இன்றைய பெண்கள் உயர்ந்த பொறுப்பிற்கு வந்தாலும் அவர்கள் செய்யும் சிறு தவறையும், பெண் சமூகத்தின் மீதான பெரும் குற்றமாகச் சித்தரிக்கும் மனநிலை மாறவேண்டும் எனவும் பெண் சமூகம் தன்னம்பிக்கையுடன் அனைத்துத் துறைகளிலும் பங்கெடுக்க வேண்டும் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார். 

இதேபோல, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி. மலர்விழி அவர்கள் பேசுகையில், இன்றைய கால சூழலில் பெண்கள் கல்வி கற்பது மிகவும் அவசியமானது எனவும், கல்வியும் சுய திறனும் தான் பெண்களை இன்றைய சமூகத்தில் தன்னம்பிக்கையோடு வாழ வகை செய்யும் என்பதோடு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சமூக சேவையை வெகுவாக பாராட்டியதுடன் அவர்களின் மூலமாக வருடம் தோறும் 5 பெண்களுக்கு இலவச கல்வியை தங்கள் கல்லூரியில் வழங்கிட தயாராக இருப்பதாக கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...