கோவை: கோவையை அடுத்த போத்தனூரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை மாநகரக் கிளையின் சார்பில், பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்பை அமைத்து கொடுக்கும் வகையில் 50 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் விழா கடந்த வியாழனன்று நடைபெற்றது.
கோவை: கோவையை அடுத்த போத்தனூரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை மாநகரக் கிளையின் சார்பில், பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்பை அமைத்து கொடுக்கும் வகையில் 50 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் விழா கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் தலைமை தாங்கினார். மேலும், கோவை மாநகர துணை ஆணையாளர் (சட்டம்-ஒழுங்கு) திருமதி. S. லட்சுமி, IPS., ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி. மலர்விழி மற்றும் திவ்யோதயா பல்சமய நல்லிணக்க மையத்தின் தலைவர் திரு. ஜான் பீட்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியதுடன் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினர்.
இதனையடுத்து, கோவை மாநகர துணை ஆணையாளர் (சட்டம்-ஒழுங்கு) திருமதி. S. லட்சுமி, IPS.அவர்கள் பேசுகையில், பெண்களை இழிவாகக் கருதிய காலம் மாறி பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையான பங்களிப்பை வழங்கிவரும் இந்த காலகட்டத்தில், நமது குடும்பத்தில் பெண் குழந்தைகளை சமமாக பாவிக்கும் மனப்பக்குவத்தைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டிட வேண்டும் என்றார்.

மேலும், இன்றைய பெண்கள் உயர்ந்த பொறுப்பிற்கு வந்தாலும் அவர்கள் செய்யும் சிறு தவறையும், பெண் சமூகத்தின் மீதான பெரும் குற்றமாகச் சித்தரிக்கும் மனநிலை மாறவேண்டும் எனவும் பெண் சமூகம் தன்னம்பிக்கையுடன் அனைத்துத் துறைகளிலும் பங்கெடுக்க வேண்டும் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதேபோல, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி. மலர்விழி அவர்கள் பேசுகையில், இன்றைய கால சூழலில் பெண்கள் கல்வி கற்பது மிகவும் அவசியமானது எனவும், கல்வியும் சுய திறனும் தான் பெண்களை இன்றைய சமூகத்தில் தன்னம்பிக்கையோடு வாழ வகை செய்யும் என்பதோடு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சமூக சேவையை வெகுவாக பாராட்டியதுடன் அவர்களின் மூலமாக வருடம் தோறும் 5 பெண்களுக்கு இலவச கல்வியை தங்கள் கல்லூரியில் வழங்கிட தயாராக இருப்பதாக கூறினார்.