வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வால்பாறை நகரில் வாழைத்தோட்டம், காமராஜ் நகர், காந்தி நகர், டோபி காலனி, சிறுவர் பூங்கா மற்றும் ஸ்டான்மோர் எம்.ஜி ஆர் நகர் பகுதிகளில் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அரசு போக்குவரத்து பணிமனை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதனிடையே பல இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. வால்பாறை பொள்ளாச்சி சாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் அடியில் மண் சரிவு ஏற்பட்டதால் வால்பாறை பொள்ளாச்சி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த இடங்களை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு காவல் ஆய்வாளர் திருமேனி, வட்டாட்சியர் சியாமளா தேவி, தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது மயில் கணேசன் ஆகியோர் இன்று காலை பார்வையிட்டனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிகள் மற்றும் நகராட்சி சமுதாய கூடங்களில் தங்கவும், அவர்களுக்கான உணவையும் ஏற்பாடு செய்தனர். வெள்ளம் வீடுகளுக்குள் புகாமல் இருக்க வாழைத்தோட்ட ஆற்றைத் தூர் வார நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.