கோவை: ரயில்வே துறையின் வரலாற்றைப் போற்றும் வகையில், கோவை உள்பட 22 ரயில்நிலையங்களில் டிஜிட்டல்' அருங்காட்சியகம் சுதந்திர தினமான இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

ரயில்வே அருங்காட்சியகம் அமைப்பதற்குத் தனியாக நிதியுதவி அளிக்காத நிலையில், அதற்குப் பதிலாக ரயில் நிலையங்களின் சுவர்களில் டிஜிட்டல் அருங்காட்சியகங்கள் அமைக்கலாம் என கடந்த மார்ச் 26-ம் தேதி பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி, சுதந்திர தினமான இன்று முதல் கோவை, ஈரோடு, பெங்களூரு, விஜயவாடா, செகந்தராபாத், ஹெளரா, லக்னெள, பிரயாகை, டெல்லி, கோரக்பூர் உள்பட 22 ரயில் நிலையங்களில் டிஜிட்டல் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் திரை இருக்கும் ரயில் நிலையங்களில் இந்த டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திரை 5.1 மீட்டர் நீளமும், 2.1-3.2 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் மூலம் ரயில்வேத்துறையின் வரலாறு மற்றும் தற்போது அடைந்துள்ள வளர்ச்சி குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூற முடியும் என ரயில்வேத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.