கோவை: கோவையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.

நீலகிரியில் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இதற்கான நடவடிக்கையும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் போல கோவை மாவட்டத்திலும் மேட்டுப்பாளையம், மதுக்கரை, போளுவாம்பட்டி, உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
மேலும், அந்த மனுவில், நீலகிரி மாவட்டத்திற்கு வழங்கி உள்ள தீர்ப்பு மேற்கு தொடர்ச்சி மலையோரம் உள்ள கோவை மாவட்டத்திற்கு பொருந்தும் என்றும், இதே போல நொய்யல் நீர் வழிப்பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்.வழிப்பாதையை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.