இடுக்கி: கனமழை காரணமாக கேரளத்தின் 27 அணைகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக அவற்றை ஒரே நேரத்தில் திறக்கும் நிலை ஏற்பட்டது.
இடுக்கி: கனமழை காரணமாக கேரளத்தின் 27 அணைகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக அவற்றை ஒரே நேரத்தில் திறக்கும் நிலை ஏற்பட்டது.
இது போல 2403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையும் நிரம்பி வருகிறது. இன்னும் 5 அடி தண்ணீர் பெருகினால் அணை முழு கொள்ளவை எட்டி விடும். நேற்று மாலை அணையின் நீர் மட்டம் 2398 அடியை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி அணையின் மதகுகளைத் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அணையின் ஐந்து மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணையில் கடந்த 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதகுகள் திறக்கப்பட்டது. அதன் பிறகு 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அணையைத் திறக்கும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.