கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் புறத்தில் நடிகர் சிபிராஜின் நடிப்பில் வரவுள்ள திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றதால் மேம்பாலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் நடிகர் சத்தியராஜின் மகன் சிபிராஜின் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கான படப்பிடிப்பு நேற்று இரவு நடைபெற்றது. பாலத்தின் கீழ் புறத்தில் திரைப்படத்திற்கான சூட்டிங் நடைபெறுவதையொட்டி பரபரப்பான சூழலில், வாகனங்களும் அதேபோல கூட்டம் கூட்டமாக மக்கள் நின்றதாலும் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் தொடங்கிய இந்த படப்பிடிப்பால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் ஏதாவது அசம்பாவிதமா? என்று நினைத்து அந்தப் பகுதியில் வாகனத்தை நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனால் மேம்பாலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல அண்ணா சிலை அருகே கனரக வாகனங்களை நிறுத்தி வேறு பாதையில் திருப்பிவிட்டனர். எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென நடத்தப்பட்ட சினிமா படப்பிடிப்பால் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள சுற்றுவட்டாரத்தில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.