ஒரே மாதத்தில் 2-வது முறையாக நிரம்பி வழியும் மேட்டூர் அணை

சேலம்: தொடர் கனமழையின் காரணமாக காவிரியில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுவதால், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.


சேலம்:  தொடர் கனமழையின் காரணமாக காவிரியில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுவதால், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி அணை கடந்த 8-ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த உபரி நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 80,000 கன அடியானது. கபினி அணை வரலாற்றில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு 80,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, மற்றொரு அணையான கிருஷ்ணராஜ சாகர் அணையும் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், 63,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், காவிரி ஆற்றில் 1.43 லட்சம் கனஅடி நீர் பெருக்கெடுத்து வருகிறது.

இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து 1.25 லட்சம் கனஅடியாக உள்ளது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி, மேட்டூர் அணையில் இருந்து நொடிக்கு 80,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. டெல்டா பாசனத் தேவையைவிட அதிகமாக தண்ணீர் திறக்கப்படுவதால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

120 அடிகொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அத்துடன், 93.47 டிஎம்சி நீர் இருப்பு கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய இருப்பு 92.01 டிஎம்சி ஆக இருந்தது. நீர்வரத்து அதிகமாக இருந்ததால், இன்று இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, கடந்த மாதம் 23-ம் தேதி 4 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...