நீதிமன்றம் விடுவித்தும் திருமுருகன் காந்தியை மீண்டும் கைது செய்த போலீசார்

சென்னை : தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சைதாப்பேட்டை விடுதலை செய்த நிலையில், அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சைதாப்பேட்டை விடுதலை செய்த நிலையில், அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெர்மனி சென்ற திருமுருகன் காந்தி ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பேசினார். பின்னர், பல்வேறு நாடுகளுக்கு சென்று விட்டு நார்வேயில் இருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் வந்து இறங்கினார். அப்போது அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்தனர். அரசுக்கு எதிராகப் பேசுவது, இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டில் பேசுவது என்று வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டது.

பின்னர், பெங்களூரூவில் இருந்து தமிழக போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்ட அவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி பிரகாஷ் தமிழக போலீசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன்..?, அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஏன் அவசரம் அவசரமாக திருமுருகன் காந்தியைக் கைது செய்தீர்கள்..?, பிரிவினை பேச்சு வீடியோவை ஏன் 64 நாட்களாகியும் தாக்கல் செய்யவில்லை என்று சாரமாரியாக நீதிபதி பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், போலீஸ் அவரை சிறையில் அடைக்க அனுமதி கோரி இருந்தது. ஆனால், திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது. அதேபோல், போலீஸ் காவலில் அனுப்பவும் முடியாது. தேவையானால் 24 மணி நேரத்திற்குள் அவரை விசாரிக்கலாம் என நீதிபதி கூறினார். நீதிமன்றத்தின் தீர்ப்பால் விடுதலையான திருமுருகன் காந்தி, வெளியே வந்த போது போலீசார் மீண்டும் கைது செய்தனர். அப்போது, அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்து திருமுருகன் காந்தியை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...