கோத்தகிரியில் ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம்

நீலகிரி : கோத்தகிரி அருகே கட்டுமான பணிக்காக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே கட்டுமான பணிக்காக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். 



கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காக சிறிய டெம்போ மூலம் பணியாட்களை ஏற்றி சென்றுள்ளனர். கன்னேரிமுக்கு செல்லும் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வாகனம் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 10 பேரும் படுகாயங்களுடன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக 2 பேரை உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.



சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி, நீலகிரி மாவட்ட கிராமப் புறங்களில் தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் பணிபுரிய சரக்கு வாகனங்களிலேயே ஆட்களை ஏற்றிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டு மனித உயிர் பலி ஏற்படுவதற்கு முன் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...