கோவை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தினர்.
கோவை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தினர்.

கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியானது, கோவை காந்திபுரம் அண்ணா சிலையிலிருந்து, வி.கே.கே மேனன் சாலை வழியாக வந்து சித்தாப்புதூரில் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், ம.தி.மு.க., சார்பில் மோகன்குமார், த.பெ.தி.க., பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், கொ.ம.தே.க., ஆதி தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் படத்திற்கு கோவை மாவட்ட பார் கவுன்சில் சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்ட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
