திருப்பூர் : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திருப்பூரில் அனைத்து கட்சிகள் மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் மெளன ஊர்வலம் நடைபெற்றது.
திருப்பூர் : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திருப்பூரில் அனைத்து கட்சிகள் மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் மெளன ஊர்வலம் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதிக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மாலை 4 மணி அளவில் திருப்பூரில் உள்ள தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், தொழிற் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில், 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலமானது திருப்பூர் ரயில் நிலையம் அருகிலிருந்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது. பின்னர், மாநகராட்சி அருகே கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.