கோவை: வாகன ஓட்டிகள் டிஜி லாக்கரை பயன்படுத்தி போலீசாரிடம் ஆவணங்களை காண்பிக்கலாம் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
கோவை: வாகன ஓட்டிகள் டிஜி லாக்கரை பயன்படுத்தி போலீசாரிடம் ஆவணங்களை காண்பிக்கலாம் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

டிஜி லாக்கர் எனப்படும் மின்னணு பெட்டகத்தில் வாகனங்களின் பதிவுச் சான்று (ஆர்சி), காப்பீடு மற்றும் வாகன ஓட்டியின் லைசென்ஸ் விவரத்தை பதிவு செய்து மின்னணு ஆவணமாக பாதுகாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போலீசார் தேவைப்படும்போது இந்த விவரங்களை டிஜி லாக்கரிலிருந்து பரிசோதித்துக் கொள்ள முடியும்.
மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து கடந்த வாரம் இத்தகைய வசதியை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு இந்த முறை அமலுக்கு வந்தது. ஆனால், இது செல்லாது என்ற வதந்தி பரவியது. இதனால், பல போலீசார் டிஜி லாக்கரில் சேமிக்கப்பட்ட ஆவணங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதில், டிஜி லாக்கர் மற்றும் 'எம்பரிவாஹன்' போன்ற செயலிகள் மூலமாக வாகனத்திற்கான ஆவணங்களை காண்பிக்கும் போது அதனை போலீசார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.