வாகன ஓட்டிகள் டிஜி லாக்கரை பயன்படுத்தி போலீசாரிடம் ஆவணங்களை காண்பிக்கலாம் - மத்திய அரசு

கோவை: வாகன ஓட்டிகள் டிஜி லாக்கரை பயன்படுத்தி போலீசாரிடம் ஆவணங்களை காண்பிக்கலாம் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.


கோவை: வாகன ஓட்டிகள் டிஜி லாக்கரை பயன்படுத்தி போலீசாரிடம் ஆவணங்களை காண்பிக்கலாம் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.



டிஜி லாக்கர் எனப்படும் மின்னணு பெட்டகத்தில் வாகனங்களின் பதிவுச் சான்று (ஆர்சி), காப்பீடு மற்றும் வாகன ஓட்டியின் லைசென்ஸ் விவரத்தை பதிவு செய்து மின்னணு ஆவணமாக பாதுகாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போலீசார் தேவைப்படும்போது இந்த விவரங்களை டிஜி லாக்கரிலிருந்து பரிசோதித்துக் கொள்ள முடியும்.

மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து கடந்த வாரம் இத்தகைய வசதியை ஏற்படுத்தியது. 

கடந்த ஆண்டு இந்த முறை அமலுக்கு வந்தது. ஆனால், இது செல்லாது என்ற வதந்தி பரவியது. இதனால், பல போலீசார் டிஜி லாக்கரில் சேமிக்கப்பட்ட ஆவணங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதில், டிஜி லாக்கர் மற்றும் 'எம்பரிவாஹன்' போன்ற செயலிகள் மூலமாக வாகனத்திற்கான ஆவணங்களை காண்பிக்கும் போது அதனை போலீசார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...