முன்னே 18., இப்போ 20.,! தமிழகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் இல்லாமல் தவிக்கிறது தொகுதிகள்

சென்னை: தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகளுக்கான எம்.எல்.ஏ.,க்களின் இடங்கள் காலியாக உள்ளன.


சென்னை: தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகளுக்கான எம்.எல்.ஏ.,க்களின் இடங்கள் காலியாக உள்ளன. 

தி.மு.க., தலைவர் கருணாநிதியின்(ஆ.க., 7) மறைவைத் தொடர்ந்து, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 88 ஆக குறைந்துள்ளது. மேலும், காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, 2016 சட்டசபை தேர்தலில், திருவாரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மறைவைத் தொடர்ந்து, திருவாரூர், எம்.எல்.ஏ., பதவி காலியாகி உள்ளது. சட்டசபையில், தி.மு.க.,விற்கு, 89 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். 

திருப்பரங்குன்றம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., - ஏ.கே.போஸ் (ஆ.க., 2) மறைந்தார். இதனால், அந்தத் தொகுதியும் காலியாக உள்ளது. 

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவர்கள் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, அவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், முதலமைச்சர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாத காரணத்தால் விசாரணை வரும் திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் காரணமாக, தற்போது, 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...