சென்னை: தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகளுக்கான எம்.எல்.ஏ.,க்களின் இடங்கள் காலியாக உள்ளன.
சென்னை: தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகளுக்கான எம்.எல்.ஏ.,க்களின் இடங்கள் காலியாக உள்ளன.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின்(ஆ.க., 7) மறைவைத் தொடர்ந்து, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 88 ஆக குறைந்துள்ளது. மேலும், காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, 2016 சட்டசபை தேர்தலில், திருவாரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மறைவைத் தொடர்ந்து, திருவாரூர், எம்.எல்.ஏ., பதவி காலியாகி உள்ளது. சட்டசபையில், தி.மு.க.,விற்கு, 89 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்.
திருப்பரங்குன்றம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., - ஏ.கே.போஸ் (ஆ.க., 2) மறைந்தார். இதனால், அந்தத் தொகுதியும் காலியாக உள்ளது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவர்கள் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, அவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், முதலமைச்சர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாத காரணத்தால் விசாரணை வரும் திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் காரணமாக, தற்போது, 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.