கூடலூர் வழியாக கேரளா செல்லும் வழித்தடங்களில் நிலச்சரிவு : மாற்றுவழியைத் தேர்வு செய்ய அறிவுறுத்தல்

நீலகிரி : தொடர் மழையின் காரணமாக கூடலூர் வழியாக கேரளா செல்லும் வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நீலகிரி : தொடர் மழையின் காரணமாக கூடலூர் வழியாக கேரளா செல்லும் வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவையொட்டியுள்ள தமிழக மாவட்டமான நீலகிரியிலும் இதன் தாக்கம் காணப்படுகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதிகளில் நிலச்சரிவும், மரங்கள் முறிந்து விழும் சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. 



இந்த நிலையில், நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நடுகனி, கூடலூர் வழியாக கேரளா செல்லும் வழித்தடங்களில் குளம் போல தண்ணீர் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, கூடலூர் கோழிக்கோடு செல்லும் மற்றொரு சாலையான வயநாடு வைத்திரி சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. அதோடு, மரங்களும் சாலையின் குறுக்கே ஆங்காங்கே முறிந்தும் விழுகின்றன. எனவே, அந்த சாலைகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது.

ஆகவே, கூடலூர் வழியிலான கேரள பயணத்தை வாகன ஓட்டிகள் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் தேர்வு செய்து செல்லுமாறும், கூடலூர் வழியாக கேரளா செல்வோர், பாதுகாப்புடன், எச்சரிக்கையாகப் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



இதனிடையே, பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கிக் கிடக்கும் கேரளா மாநிலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவம் மற்றும் கப்பற்படையிடம் உதவி கேட்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையிடமும் வர இருப்பதாகவும் அவர் கூறினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...